Diabetes-and-Tooth-loss

சர்க்கரை நோயும் பல் இழப்பும்.

சர்க்கரை நோயும் பல் இழப்பும்

நம் வாழ்க்கை பாணி மற்றும் உணவு பழக்கம் மாறும்போது சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. சர்க்கரை நோயானது உடம்பின் நோய் எதிர்ப்புசக்தியை பாதிப்பதோடு உடலின் ஆரோக்கியத்தையே பாதிப்படையச்செய்ய  காரணமாகிறது. வாய் மற்றும் பற்களில் ஏற்படும் பெரும்பாலான நோய்கள் மெதுவாக மற்றும் கால நீட்சியுடன் தீவிரமடைவதாலும், முற்றிய நோயை முற்றிலும் மருத்துவத்தால் குணப்படுத்துவதென்பது கடினமாக இருப்பதாலும் பல் மருத்துவரை குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கொருமுறை அணுகி ஆலோசனை பெறுவதும் நோய்களுக்கு தகுந்த நேரத்தில் சிகிச்சை பெறுவதும் வழக்கமாக கொள்ளவேண்டும். இல்லையேல் பல் இழப்பு ஏற்படுவது உறுதி. அதுபோலவே நாளுக்கு நாள் அதிகமாகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பல் தொடர்பான நோய்கள் அதிகமாகிக்கொண்டே வருவதை எச்சரிக்கையுடன் கருத்தில் கொள்ளவேண்டும்.

பல் பிடுங்கும்போது சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடுடன் இருக்கவேண்டுமா?

[caption id="attachment_2534" align="alignleft" width="239"]Diabetes-Checking Diabetes Checking @ Jerush[/caption] உதுதியாக 'வேண்டும்' என்று அழுத்தமாக சொல்லமுடியும். என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்த இக்கட்டான சூழல்களில் ஒன்றை குறிப்பிடுகிறேன். அருகிலுள்ள ஊரிலிருந்து ஒருவர் பல்லில் வலி இருப்பதாக சொல்லி எங்கள் பல் மருத்துவமனைக்கு வந்தார். சுமார் பத்து வருடங்களாக சர்க்கரை நோய் இருப்பதாகவும் சொன்னார். நான் அவரை பரிசோதனை செய்தபோது, பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் அதிகமாக 'பிளேக்' படிமங்கள் இல்லை என்றாலும் அவரின் ஈறுகள் அதிகமாக பாதிக்கப்பட்டும் பற்கள் ஆட்டங்காணவும் செய்தது. இதிலிருந்து அவரது இரத்தத்தின் அதிக சர்க்கரை அளவு நோய் எதிர்ப்புசக்தியை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பது புரிந்துகொள்ள முடியும். நோய் எதிர்ப்பு சக்தியே எந்த நோய் பாதிப்பிற்கும்  எதிரான முன் களப்போராளி என்பதால் சர்க்கரை நோயாளிகள் தகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தவறாமல் பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.

தக்கலை 'ஜெருஷ் பல் மற்றும் மூகசீரமைப்பு மருத்துவமனை'

நாங்கள் 2002 ஆம் ஆண்டிலிருந்து பல் மருத்துவ சேவையில் உள்ளோம். பல், வாய் மற்றும் முக சீரமைப்பு சிகிச்சையில் மக்கள் மனதில் சிறப்பான இடத்தை எங்கள் உலகத்தரமான சிகிச்சை வசதிகள் மற்றும் அர்பணிப்புடனான மருத்துவ சேவையின் காரணமாக பெற்றுள்ளோம். சென்னை அடையாறில் எங்கள் கிளை செயல்படுகிறது. விரைவில் நாகர்கோவிலில் புதிய கிளை துவக்கப்பட்ட உள்ளது என்பதையும் பொதுமக்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Author: Dr. Bladbin, MDS. (Oral & Maxillofacial Surgeon) Jerush Dental & Facial Corrective Centre

No Comments yet!

Your Email address will not be published.